Breaking News

மாற்றுத்திறனாளிகள் டவுன்ஷிப் திட்டத்தில் வீடு- முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

கோயம்புத்தூர் :

கோயம்புத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில்கொண்டு சிறப்புதிட்டமாக செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டுகுப்பையில், 101 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 86 பயனாளிகளுக்கு வீடுகள்கட்டப்படவுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்மாவட்டம், செட்டிபாளையம்பேரூராட்சியில்113 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சென்ட்நிலம்இலவசமாக வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. பயனாளிகள்தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் புதிய வீடு வழங்கக்கோரி செட்டிபாளையம் பேரூராட்சியின் கிராமசபை கூட்டத்தில் மனு அளித்தனர். அனைவருக்கும்வீடு 2023-24 திட்டத்தின் கீழ் வீடுகள்கட்டுவதற்கு அரசாங்கம் மானியத்தை BLC ( பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம்)  மூலம் அனுமதித்தது.

PMAY (கிராமின்) திட்டம் வீடற்ற அனைவருக்கும் வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாக  நலிவடைந்த பிரிவினரின்(EWS) வீட்டுப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே முதன்மையான நோக்கமாகும். 

தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது. பயனாளிகள் தலைமையிலான கட்டுமானத்தின் கீழ், தகுதியுடைய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் நகர்ப்புற குடும்பங்களுக்கு, 30 சதுர மீட்டருக்கு குறையாத தரைவிரிப்பு பரப்புபன் சொந்தமாக வீடு கட்ட ரூ.2.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

EWS வகையைச் சேர்ந்த தகுதியுள்ள குடும்பங்கள்தங்களுக்குச் சொந்தமான புதிய வீடுகளைக் கட்டலாம். அத்தகைய குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு உதவியாக ரூ.1.50 லட்சமும், மாநில அரசு உதவியாக ரூ.0.60 லட்சமும்பெறலாம். 

HFA-BLC  திட்டத்தின்படி, பயனாளி அரசு மானியம் ரூ.2.10 லட்சம் மூலம்தங்கள் சொந்த நிதியில் அரசு விதிமுறைகளின்படி வீடுகளை கட்ட வேண்டும். பயனாளிகள் மோசமான பொருளாதார நிலை மற்றும் இயலாமை காரணமாக நிதியை திரட்ட முடியாததால், தேவைப்படும் நிதிக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரை அணுகினர். 

மாற்றுத்திறனாளி பயனாளிகளின்கோரிக்கையின்அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் சார்பில்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில்ஒரு  வீட்டிற்கு கட்டுமான செலவு ரூ.6,54,500 ஆகும். அரசு மானியம்ரூ.2.10 மற்றும்ஜி.டி நாயுடு அறக்கட்டளையின் பங்களிப்பாக ரூ.4.44 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,

மாற்றுத்திறனாளிகளுக்கு நலனை கருத்தில் கொண்டு சிறப்புதிட்டமாக செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டு குப்பையில், 116  மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்2023-24த்தின் கீழ் 86 வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

கட்டபடவுள்ள வீடுகளின் உத்தேச பரப்பு 300 சதுர அடியாகும். இத்திட்டத்தின் கீழ் 101 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 86 பயனாளிகளுக்கு வீடு கட்டப்படவுள்ளது. 

இந்த வீடுகளில் ஹால், சமைலறை, படுக்கறை மற்றும்கழிவறை வசதிகள் கட்டப்படவுள்ளது. ஒவொரு வீட்டிற்கும் ரூ.2.10 இலட்சம் அரசு மானியத்துடன், ரூ.4.40 இலட்சம் தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடனும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வீடுகள்  கட்டித்தரப்படவுள்ளன.

அரசின் நிலத்தில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு ஒவ்வொரு பயனாளியின் பங்களிப்பு தொகையான ரூ.4.40 இலட்சத்தை ஜி.டி.நாயுடு டிரஸ்ட் சார்பாக வழங்கப்படவுள்ளது. இந்த டிரஸ்ட்க்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 

மாற்றுத்திறனாளிகளுக்கு டவுன்ஷீப் மாதிரி வீடு கட்டப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் இவை  கட்டப்படவுள்ளது. சாலை, குடிநீர்வசதிகள் பேரூராட்சி சார்பில் இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக நம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்படவுள்ளது. பேரூராட்சிகள் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை இணைந்து செயல்படவுள்ளன. 

இந்தவீடுகளை விரைவாக கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ்பயனடைந்த ஓராட்டுகுப்பை கிராமத்தை மாற்றுத்திறனாளி பயனாளி திரு.சந்தோஷ் அவர்கள் தெரிவித்தாவது,

என்பெயர் சந்தோஷ்குமார். நான் கருமத்தம் பட்டியில் உள்ள அனுகிரஹா ஹோமில் வசித்து வருகிறேன். சாலை விபத்தினால் 2012 ஆம் ஆண்டு எனக்கு முதுகுதண்டு வடம்பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இருந்தபோதிலும் என்னால் சகஜமாக நடக்க இயலவில்லை. கால்களால் நடக்க முடியாததால், சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லமுடியும். 

எனவே, வீட்டிலிருந்தபடி கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில்Data Entry வேலை செய்து வந்தேன். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று தனியாக அமைப்பு ஏற்படுத்தி அதன்வாயிலாக அரசின்சலுகைகள் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுவந்தோம். இலவச வீட்டுமனைப்பட்டாவேண்டி மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்திருந்தோம்.

அதனைத்தொடர்ந்து, 113  மாற்றுத்திறனாளிகளுக்கு 2சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டது. என்போன்ற மாற்றுத்திறனாளிகள் வேலைசெய்து அன்றாட வீட்டு செலவுகளை கவனிப்பதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. 

எனவே, வீட்டுமனை பெற்ற எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில்புதிய வீடு கட்டிதர செட்டிபாளையம் பேரூராட்சியின் கிராமசபை கூட்டத்தில்மனு அளித்திருந்தோம். எங்கள் மனுவின் மீது மிகுந்த அக்கறையுடன்மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இன்று தனியார்பங்களிப்புடன் எங்களுக்கு வீடுகள்கட்ட அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்துள்ளார். என்போன்ற மாற்றுத்திறனாளிகளின்கனவு இல்லத்தை நனவாக்கி அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியினை  தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ஓராட்டுகுப்பை கிராமத்தை மாற்றுத்திறனாளி பயனாளி இஸ்மாயில் அவர்கள் தெரிவித்தாவது,

என்பெயர் இஸ்மாயில். ஓராட்டுக்குப்பையில் வசித்து வருகிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் என்னுடைய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளி ஆன என்னுடைய குறைவான வருமானத்தில் எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. இந்நிலையில்இலவச வீட்டுமனைப்பட்டாவேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்திருந்தோம். அதனடிப்படையில் அரசின்சார்பில் எங்களுக்கு 2சென்ட்வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்கியது. 

தற்போது அந்த எங்களுக்கு அரசின்பங்களிப்பாக ரூ.2.10 இலட்சம், ரூ.4.50 இலட்சம்ஜி.டிநாயுடு அறக்கட்டளையின்பங்களிப்புடன் எங்களுக்கு அந்த இடத்தில்வீடுகள்கட்டிதரகின்றார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்என்பது மிகவும்அவசியமாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வேலைவாய்ப்பு இருக்காது, வீடு வாடகைகொடுக்க முடியாது. குடும்ப செலவுகளை சமாளிப்பதை பெரிய கஷ்டமாகும். மாற்றுத்திறனாளிகளுக்கான டவுன்ஷிப் அமையவுள்ள இந்த வீடுகள் இந்தியாவிற்கே முதல் எடுத்துக்காட்டு திட்டமாக அமையும். 

இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான டவுன்ஷிப்பை அரசு மேலும் கட்டவேண்டும்என  கேட்டுக்கொள்கிறேன். என்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு என்பது கனவு இருக்கின்றது.

இந்த கனவை நனவாக்கி தந்த தமிழ்நாடு அரசுக்கும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பு :

ஆ.செந்தில்அண்ணா,  செய்தி மக்கள்தொடர்பு அலுவலர்,

கி. மோகன்ராஜ், உதவி மக்கள்தொடர்பு அலுவலர் (செய்தி)

கோயம்புத்தூர்மாவட்டம்.


No comments

Thank you for your comments