Breaking News

திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் அறிமுக கூட்டம் | மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்... எம் எல் ஏ க.சுந்தர் பேச்சு

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதி நாகேஷ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் அறிமுக கூட்டம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. 



திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம் எல் ஏ க.சுந்தர்  வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:- 

இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதைவிட நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால்  மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். 

இந்தியாவில் 70- ஆண்டு கால அரசியலில் ஒரே வேட்பாளர் மூன்று முறை சீட்டு வழங்கி இருக்கிறது. செல்வத்துக்கு மட்டும் தான் 2014 ஏழை பங்காளனாகவும், 2019-ல் உண்மை தொண்டனாகவும், 2024-ல் வரலாறு சாதனையை படைத்த வகையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலே நாம் அனைவரும் பாடுபட வேண்டும். 

வேட்பாளர் செல்வம் அன்பாக பழகக்கூடிய உங்கள் தொகுதியிலே பணியாற்றிக் கூடியவர். ஆனால் எதிர் கூட்டணி வேட்பாளர் பலமுறை பஞ்சாயத்தில் ஆட்சி செய்திருக்கிறார். பஞ்சாயத்து என்றால் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் மேலும் அவர் பஞ்சாயத்தில் நீங்கள் யாரும் விலை போக மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மேலும் இந்தியாவை காப்பாற்றக்கூடிய இந்தியா கூட்டணிக்கு வலிமை சேர்க்கின்ற  வல்லவராக வல்லவராக  நம்முடைய தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது நாம் செய்த சாதனையும் சொல்ல வேண்டும், செய்யப் போகிற சாதனையும் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் திமுக மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வமான வக்கீல் எழிலரசன் ,திமுக தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.சுபேர்கான், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அருள், ஐயப்பன், குமரகுருநாதன், நாதன், இந்திய முஸ்லிம் க் கட்சி மாவட்ட செயலாளர்கள், சலீம் , முன்னா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.சங்கர்,இ. முத்துக்குமார்,கே. நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பி.வி ஸ்ரீனிவாசன் லட்சுமிபதி, மதிமுக சார்பில் கருணாகரன், திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் இளைய வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மு.க தமிழரசு, பாசறை செல்வராஜ், மதிஆதவன் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொன்மொழி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார் , படு நெல்லி பாபு, மற்றும் திமுக நிர்வாகிகள் வர்த்தக அணி துணை செயலாளர் வி. எஸ் ராமகிருஷ்ணன், எஸ்கேபி சீனிவாசன், சிகாமணி, எம் எஸ் சுகுமார், கே ஏ இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments