களியனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம்:
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 04.03.2024 முதல் 11.03.2024 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 127 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களில், வருவாய் துறை சார்பில் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா- 92 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகளிர் சுய உதவி குழு வங்கி கீழ் கடன் -12 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டி -7 நபர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் இடுப்பொருட்கள்-
5 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் தெளிப்பான் கருவி - 1 நபருக்கும், பழச்செடி தொகுப்பு -2 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கிக் கடன்-1 நபருக்கும், சிறு வணிக கடன்- 7 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த மக்கள் தொடர்பு திட்டம் முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு.கலைவாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., களியனூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஆ.வடிவுக்கரசி ஆறுமுகம், களியனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. டி.சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமினை தொடர்ந்து, களியனூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, பள்ளி சமையல் கூடத்தில் சமைக்கப்படும் மதிய உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments