Breaking News

தேர்தலை முன்னிட்டு 84 குழுக்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பயிற்சி

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (12.03.2024) ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 84 குழுக்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 –ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள  Flying Squad Team (36 Teams), Static Surveillance Team (36 Teams), Video Surveillance Team (8 Teams), Accounting Team, Assistant Expenditure Observer Team, Expenditure Monitoring Team, and Control Room Team ஆகிய மொத்தம் 84 குழுக்களுக்கான பணிகள் குறித்த பயிற்சியும்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மேற்படி குழுக்களின் பணி மற்றும் பொறுப்புகள்  குறித்தும்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. பார்த்தசாரதி, மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (பொது) (பொ)  திரு.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்  கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments