வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய ரூ.71 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் - ஆந்திராவைச் சேர்ந்த குற்றவாளி கைது
காஞ்சிபுரம், மார்ச் 26:
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்.இவரது பூட்டிய வீட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகளும்,அதே தெருவில் வசிக்கும் மகாவீர் சந்த் என்பவரது பூட்டிய வீட்டை உடைத்து 1453 கிராம் தங்கம் மற்றும் ரூ.ஒரு லட்சம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருந்ததாக இருவரும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்திருந்தனர்.
இப்புகார்களின் அடிப்படையில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் உத்தரவின் பேரில் அப்போது பணியாற்றி வந்த டிஎஸ்பி ஜூலியஸ்சீசர்,ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன்,சங்கர சுப்பிரமணியன், சித்ரா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சுதாகர்,சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தனிப்படையினர் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள்,தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ததில் குற்றவாளி ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.பின்னர் அம்மாநில போலீஸாரின் உதவியுடன் குற்றவாளியான சதீஷ்ரெட்டி என்ற கரியை(40)கைது செய்தனர்.
அவரிடமிருந்து 708 கிராம் தங்க நகைகள், பணம் ரூ.36லட்சம் ஆகியனவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.குற்றவாளியைப் பிடிக்க சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரையும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து தற்போதைய காஞ்சிபுரம் டிஎஸ்பி கி.முரளி கூறியதாவது:-
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் கடந்த 16.2.2024 மற்றும் 1.3.2024 ஆகிய தேதிகளில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டுகளை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன.
இரு புகாரையும் மையமாக வைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இரு சம்பவங்களிலும் குற்றவாளி ஒருவராக இருப்பதை கண்டு பிடித்தோம்.அவர் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்ததால் அம்மாநில போலீஸôரின் உதவியுடன் புத்தூரில் கரி என்ற சதீஷ்ரெட்டியை கைது செய்தோம்.
இவரிடமிருந்து மொத்தம் 708 கிராம் தங்க நகைகள் மொத்தம் ரூ.35லட்சமும்,ரொக்கமாக ரூ.36 லட்சமும் உட்பட மொத்தம் ரூ.71லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்துள்ளோம்.
இக்குற்றவாளி மீது தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களிலும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் கி.முரளி தெரிவித்தார்.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments