Breaking News

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ரூ.50,000-க்கு விற்பனை!

சென்னை: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ. 50,000-க்கு விற்பனையாகிறது.


தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, கடந்த வாரம் ரூ. 50,000-ஐ நெருங்கி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.49,640-க்கு விற்பனையானது. 

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயா்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.80,800-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு பவுனுக்கு ரூ. 49,600-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ. 6,215-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ. 49,720-க்கும் விற்பனையானது. 

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.80,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ. 50,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ. 6,250-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.80,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயர்ந்து ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.

7.02 சதவீதம் உயர்வு

அதாவது,  தங்கம் விலை மார்ச் மாதம் பெரும்பாலான நாட்களில் கிராமுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் முதல் 2 நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும், அதன் பின்பு அமெரிக்கப் பணவீக்க தரவுகள், வட்டி விகித முடிவுகள் என தங்கம் விலை தாறுமாறாக உயர துவங்கியது. 

மார்ச் மாதம் மட்டுமே 22 கேரட் தங்கம் விலை அதிகப்படியாக 6250 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, குறைவான அளவீடு எனில் 5840 ரூபாய்க்கு வர்த்தகமானது. இப்படி மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 7.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் அதிகப்படியாக 6,818 ரூபாய்க்கு வர்த்தகமானது.

ஒரே மாதத்தில் 7 சதவீதம் லாபத்தைத் தங்க முதலீட்டாளர்களுக்குக் கொடுத்தாலும், தங்கத்தை சேமிப்புக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிக்காகத் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது. இதுவும் இது திருமண சீசன் என்பதால் தங்கத்திற்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் காலம் இது.

1 சவரன் தங்கம் விலை : 

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 50000 ரூபாய், மும்பை - 49360 ரூபாய், டெல்லி - 49480 ரூபாய், கொல்கத்தா - 49360 ரூபாய், பெங்களூர் - 49360 ரூபாய், ஹைதராபாத் - 49360 ரூபாய், கேரளா - 49360 ரூபாய், புனே - 49360 ரூபாய், பரோடா - 49400 ரூபாய், அகமதாபாத் - 49400 ரூபாய், ஜெய்ப்பூர் - 49480 ரூபாய், லக்னோ - 49480 ரூபாய், கோயம்புத்தூர் - 50000 ரூபாய், மதுரை - 50000 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 75900 ரூபாய், ஹைதராபாத் - 80500 ரூபாய், கேரளா - 80500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 80500 ரூபாய், மதுரை - 80500 ரூபாய்.


 

No comments

Thank you for your comments