காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி - இருவர் கைது
மதுரை மாவட்டம், வடக்குப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி காப்பீட்டு நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது சகோதரர் ராஜேஷ்குமார் தனது சகோதரர் விக்னேஷின் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பாஸ்வேர்டை பயன்படுத்தி நான்கு சக்கர வாகனங்களுக்கு புதியதாகவும் மற்றும் ரினிவல் செய்வதாக கூறி சுமார் 127 நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலியான இன்சூரன்ஸ் பாலிசியை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காப்பீட்டு நிறுவன முதன்மை கிளை மேலாளர் ராஜேந்திரன் மேற்கண்ட நபர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி மோசடி செய்தி வருவதாக கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அவரின் இப் புகாரின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்திரவின் பேரில், குற்றவாளிகளை மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை அறிவுரையின் பெயரிலும், காவல் உதவியாளர் பாபு தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை விசாரணைக்கு பிறகு 127 நான்கு சக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போடுவதாக கூறி போலி இன்சூரன்ஸ் பார் பாலிசி வழங்கியதன் மூலம் ரூபாய் 31 லட்சத்து 46 ஆயிரத்து பத்து ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தி குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மோசடி ஈடுபட்ட விக்னேஷ் ஆங்கில பட்டதாரி என்பதும் , அவரது சகோதரர் ராஜேஷ் குமார் டிப்ளமோ பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments