Breaking News

28-03-2024-ம் தேதி ராசி பலன்கள்



மேஷம்

நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். அலுவலகத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை :  வடக்கு
  • அதிர்ஷ்ட எண் :  5
  • அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும். 

பரணி : ஒத்துழைப்பு ஏற்படும்.

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

 


ரிஷபம்

கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டி நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை :  மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும். 

ரோகிணி : தேடல்கள் ஏற்படும். 

மிருகசீரிஷம் :  விவேகத்துடன் செயல்படவும்.

 

 

மிதுனம்

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் 

மிருகசீரிஷம் : விரயம் ஏற்படும். 

திருவாதிரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

 

 

 

கடகம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதங்களுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : சந்திப்பு ஏற்படும்.

பூசம் : அனுபவம் உண்டாகும். 

ஆயில்யம் : ஆதரவான நாள்.

 

 


சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் :  3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : பொறுமை வேண்டும்.

பூரம் : மாற்றங்கள் ஏற்படும். 

உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

 


கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். நிதானம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். 

அஸ்தம் :  ஆர்வம் ஏற்படும்.

சித்திரை : மதிப்பு கிடைக்கும்.

 

 


துலாம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.

சுவாதி : மாற்றம் உண்டாகும்.

விசாகம் : அனுகூலம் ஏற்படும்.

 

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. புகழ் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் :  9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

விசாகம் : மாற்றம் ஏற்படும். 

அனுஷம் : சோர்வுகள் உண்டாகும்.

கேட்டை : புதுமையான நாள்.

 

 


தனுசு

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு சாதகமாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : வாய்ப்பு சாதகமாகும். 

பூராடம் : புரிதல் உண்டாகும்.

உத்திராடம் :  வாய்ப்பு கிடைக்கும்.

 

 


மகரம்

சவாலான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் :  8
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் :  சிந்தித்துச் செயல்படவும்.

திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.

அவிட்டம் :  இலக்குகள் பிறக்கும்.

 

 


கும்பம்

பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானத்தை கையாளவும்.

சதயம் : ஆலோசனை கிடைக்கும்.

பூரட்டாதி :  ஈடுபாடு உண்டாகும்.

 

 


மீனம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் :  4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

உத்திரட்டாதி :  தடுமாற்றமான நாள்.

ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

 

No comments

Thank you for your comments