Breaking News

விராட் - அனுஷ்கா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. 


இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். 

அதில், 

"பிப்ரவரி 15-ம் தேதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.  எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்பும், நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா" என்று குறிப்பிட்டுள்ளார். 


No comments

Thank you for your comments