Breaking News

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

காஞ்சிபுரம், மே.18:

காஞ்சிபுரத்தில் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் மாவட்ட கேரம் பயிற்சி மையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


படவிளக்கம் : காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பஙகேற்றவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கேரம் பயிற்சி மையம் சார்பில் மாவட்ட அளவிலான 3 வது கேரம் போட்டிகள் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

போட்டிகள் தொடக்க விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் என்.வேல்முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் எஸ்.பாஸ்கரன்,இணைச் செயலாளர்கள் ஜெ.செல்வக்குமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளர் ஷீலா கோபிநாத் வரவேற்று பேசினார்.

விழாவினை மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எஸ்.ஆர்.சண்முகம் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.விழாவின் நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

வயது 14, வயது மற்றும் 18 க்கும் குறைவான ஆண்,பெண் உள்ளிட்ட இருபாலர்கள் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கும் கேரம் போட்டிகள் நடைபெற்றன.

300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டிகளின் முடிவுகள் மாலையே அறிவிக்கப்பட்டு பள்ளியின் தாளாளர் எஸ்.ஆர்.சண்முகம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.முன்னதாக மருத்துவர் பகவத்கீத் கேரம் போட்டி விளையாடுவதால் ஏற்படும் பயன்களை விரிவாக விளக்கி கூறினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைத் தவிர பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பதக்கங்களும்,சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிறைவாக கூட்டமைப்பின் பொருளாளர் ப.வேல்முருகன் நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments