Breaking News

“தேசிய/உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா” - கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (29.02.2024) உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான 2023-2024ஆம் ஆண்டிற்கான “தேசிய/உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தேசிய / உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவின் 2024-ம் ஆண்டின் உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நுகர்வோர்கள் விழித்துக் கொள்ளுதல் மற்றும் இந்திய தர அமைவனத்தின் ISO முத்திரைகள் குறித்தும்  மற்றும் ISI முத்திரைகள் உடன் கூடிய பொருட்களான helmet, pressure cooker போன்ற பொருட்களை நுகர்தல் என்ற தலைப்பில் பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், மேலும் சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கு நினைவுப் பரிசும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக கடந்த ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய பள்ளி / கல்லூரிகளுக்கு ரொக்க பரிசும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதற்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக நுகர்வோர் முனையம் (Consumer Corner) என்ற பெயரில் அமைக்கப்பட்ட Digital Board-யை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments