Breaking News

ஏரிவாய் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

காஞ்சிபுரம்,ஏப்.15:

காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏரிவாய் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையும்,குமார் கண் சிகிச்சை மையமும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர். 

முகாமை இந்திய மருத்துவக் கழக கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் எம்.அருள்மொழி, என்.ஹரிகிருஷ்ணன், ஜி.சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண் மருத்துவர் மாயாசேகர் கண்தானத்தின் அவசியத்தை விளக்கிப் பேசியதுடன் இலவசமாக கண் பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார்.

 

No comments

Thank you for your comments