வேகமாக நடைபெறும் பட்டாபிராம் மேம்பால பணிகள்
ஆவடி :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் இருந்து திருநின்றவூர் செல்லும் சாலையின் குறுக்கே ரயில்வே பாதை வருவதால் வாகனங்கள் செல்ல தடையாக இருந்தது.
இதற்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடைபெற்றது. தற்பொழுது இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகையை ஓட்டியும், நாடாளுமன்றத் தேர்தலையொட்டியும் இந்த மேம்பாலப் பணி வேகமெடுத்துள்ளது.
இரண்டு மாதத்திற்குள் இந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்து ஒரு வழி பாதையாக திறக்கப்படும் என்றும், பின்னர் மற்றொரு பக்கம் பணிகள் நடைபெறும் என்று அறியப்படுகிறது.
பட்டாபிராமில் இருந்து திருநின்றவூர் சென்றடைய 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
வாகனங்கள் செல்லும் சாலைகளின் அருகே பள்ளிக்கூடங்கள் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிச்சலும் விபத்து அபாயமும் உள்ளது.
இந்தநிலையில், தற்போது இந்த பணி வேகமாக நடைபெறுவருவதால் இரண்டு மாதத்திற்கு திறக்கப்படும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காத்திருக்கின்றனர்.
பணிகள் விரைவாக நடைபெற்று பாலம் திறப்புவிழா காணுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளுக்காக உங்கள் நிருபர்
ஜெ.பிரேம்குமார்
செல்.9444224025
No comments
Thank you for your comments