காஞ்சிபுரத்தில் 226 பயனாளிகளுக்கு ரூ.86.50லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஆட்சியர்(பயிற்சி) க.சங்கீதா, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சமுக நல அலுவலர் மோ.சியாமளா வரவேற்று பேசினார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 7 பெண்களுக்கு ரூ.3.15லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும், 10 பயனாளிகளுக்கு ரூ.8.35லட்சம் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கியது உட்பட மொத்தம் 226 பயனாளிகளுக்கு ரூ.86.50லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 92 பயனாளிகளுக்கு ரூ.21,62,832 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விரு நிகழ்வுகளிலும் ஒன்றியக்குழுவின் தலைவர்கள் மலர்க்கொடிகுமார், ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுவின் தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் : பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

.jpg)

No comments
Thank you for your comments