Breaking News

17.02.2024 -ம் தேதி இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, இளைஞர் திறன் திருவிழா (Youth Skill Festival)  மற்றும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் (Job Mela) 17.02.2024  சனிக்கிழமை அன்று குன்றத்தூர் (படப்பை) ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.  

தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும், இளைஞர் திறன் திருவிழா மூலம் தேர்வு செய்து பல்வேறு  தனியார் துறைகளின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

மேலும் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலமாக நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஏதுவாக இந்த பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ‘

இதையொட்டி 17.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை குன்றத்தூர் (படப்பை) ராசி பொறியியல் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா மற்றும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

எனவே முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற (10th, +2, Diploma, Any Degree, Engineering) இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments