காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயிலில் பால்க்குடத் திருவிழா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் திரௌபதியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஆகாய கன்னியம்மன் திருக்கோயில்
.இக்கோயிலில் 4 வது ஆண்டாக பக்தர்களால் பால்க்குடம் எடுத்து வரப்பட்டு பாலாபிஷேகம் உட்பட 36 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன.பின்னர் மூலவர் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழக்குழுவினர் செய்திருந்தனர்.
படவிளக்கம்}ஆகாய கன்னியம்மன் ஆலயத்துக்கு பால்க்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

No comments
Thank you for your comments