மத்திய அரசு ஓட்டுனர்களுக்கு எதிராக கொண்டுவந்த புதிய சட்டத்தை திரும்ப பெற மனு
காஞ்சிபுரம்,ஜன.12
மத்திய அரசு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் வகையில் கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டி காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சிவகுமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் மத்திய அரசு கொண்டு வந்த ஹிட் & ரன் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கட்டாயம் நிறைவேற்றி அரசு இதழில் வெளியிட வேண்டும், வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்கிட வேண்டும், வெளி மாநிலம் சென்று வரும் ஓட்டுனர்களுக்கு வழிப்பறி கொள்ளையர்களால் உயிர் சேதம் ஏற்பட்டால் எந்த மாநில எல்லையில் நடக்கிறதோ அந்த மாநில அரசு ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும்,
வெளிமாநிலங்களில் உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுநரின் உடலை அவர் சொந்த ஊரில் ஒப்படைக்க வேண்டும், வெளிமாநிலங்களில் உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுநர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் குப்பன், மாவட்ட துணை தலைவர் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முனியாண்டி, செயற்குழு உறுப்பினர் ராஜ், சிவக்குமார், நீலகண்டன் மாவட்டச் செய்தி தொடர்பாளர் ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமன நிர்வாகிகள் உடன் இருந்தனர்


No comments
Thank you for your comments