தேவரியம்பாக்கம் ஊராட்சி அளவில் பாலர் சபை முதல் கூட்டம்
காஞ்சிபுரம் :
இந்நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசியதாவது,
தேவரியம்பக்கம் ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை, தூய்மை மற்றும் பசுமை கிராமமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது
இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக பாலர் சபை தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வெற்றிகரமாக தொடங்கி நடத்தும் ஊராட்சித் தலைவர், உள்ளாட்சி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்
பாலர் சபைக் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் துணைத் தலைவர் செயலாளர் விவசாயம் சுய தொழில் சுற்றுச்சூழல் நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறை உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்
பின் பதவி ஏற்றுக்கொண்ட பின் ஒவ்வொரு துறை வாரியாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட பாலர் சபை நிர்வாகிகள் ஊராட்சிக்கு தாங்கள் என்ன பணியை ஆற்ற இருக்கிறோம் என்று குறிப்பிட்டு பேசியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
மேலும் ஊராட்சி வளர்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு தீர்மானங்களும் பள்ளி கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் யசோதரன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன்' மற்றும் காஞ்சனா, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழில், தோண்டாங்குலம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஜான்சிராணி ஆகியோரும், மாநில ஊரக வள்ச்சித்துறை நிறுவன பயிற்சியாளர்கள் அரவிந்தன் மற்றும் கோகுல் ஆகியோரும், பார்வையாளர்களாக துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் பொதுமக்கள் அங்கன்வாடி காலை உணவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்


.jpg)



No comments
Thank you for your comments