Breaking News

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு எம்பி,எம்எல்ஏ அஞ்சலி

காஞ்சிபுரம், ஜன.19:

காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் உடல் உறுப்பு தானம் செய்த கிளார் கிராமத்தைச் சேர்ந்தவரின் உடலுக்கு எம்பி,எம்எல்ஏ மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் வெள்ளிக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளார் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.கோபி. இவர் உடல் உறுப்புகளை தானம் செய்தமைக்காக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப் பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யாசுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் கிளார் கிராமத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


No comments

Thank you for your comments