75 வது குடியரசு தினவிழா மோரை ஊராட்சியில் சிறப்பாக நடைப்பெற்றது
75 ஆவது குடியரசு தின விழா மோரை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் 25 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றி விட்டு பின்னர் அரசு பள்ளிக்குச் சென்று கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார் பின்னர் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையாக பரிசுகளையும் வழங்கினார் இவருடன் துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை நிறைவடைந்த பிறகு கிராம சபையில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியையும் தெரிவிக்கப்பட்டது இவர் இந்த ஆண்டு சரியான முறையில் சாலைகளை மேம்படுத்தி மற்றும் குளங்களை தூர்வாரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடைப்பயிற்சி செய்ய குளக்கரையின் மீது சிமெண்ட் பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வைத்தார் இதனால் அப்பகுதியில் இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றன இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம சபையை சிறப்பாக நடத்தி முடித்தனர்
No comments
Thank you for your comments