காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 49 ஆவது வார்டில் புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ சுந்தர் திறந்து வைத்தார்!!!
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வது வார்டு சதாவரம் , சின்னசாமி நகரில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முழு நேர புதிய நியாய விலை கடை மற்றும் மாநகராட்சி பொது நிதியின் கீழ் 6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், சுற்று சுவர் ஆகியவற்றை திறந்து வைக்க 3வது பகுதி கழக செயலாளர் அ தசரதன் மற்றும் 49 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகர மகளிர் தொண்டர் அணி தலைவர் பூங்கொடி தசரதன் ஆகியோர் முன்னிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான க சுந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் புதிய நியாய விலை கடையை சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க செல்வம் , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் , மாநகர துணை செயலாளர் ஜெகநாதன் , மண்டல குழு தலைவர் எஸ் கே பி சாந்தி சீனிவாசன், பகுதி கழக செயலாளர்கள் திலகர், சந்துரு , தசரதன் , வெங்கடேசன் மற்றும் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஏ எஸ் முத்துச்செல்வன் , மாவட்ட பொறியாளர் அணி தலைவர் எஸ் தாஸ் , நெசவாளர் அணி அமைப்பாளர் மலர்மன்னன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி , விஜயா,
மாமன்ற உறுப்பினர்கள் கயல்விழி , சுரேஷ், சரஸ்வதி பாலமுருகன், தேனம்பாக்கம் சங்கர், மாவட்ட சிறுபான்மை அணி துணைத் தலைவர் இ ஜாபர் ,மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், பகுதி கழக துணை செயலாளர் விமல் தாஸ் , மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜிம் மாஸ்டர் ஜெய்கணேஷ் , மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் மு முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





No comments
Thank you for your comments