3 டன் எடையில் செங்கரும்புகளால் அமைக்கப்பட்ட பாரம்பரிய செங்கரும்பு குடில் - பார்வையிட அனுமதி
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிருப்பூர் கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் பிரதானமான தொழிலாக விவசாயம் செய்துவருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
விவசாயி என்பதால் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்.
அவ்வகையில் கடந்தாண்டு வரை செங்கரும்பில் ஆன பொங்கல் பானை , ஜல்லிக்கட்டு காளைகள் , பாரதப் பிரதமர் மோடி உருவம் என பலவகையில் ஆண்டுதோறும் அமைத்து செயல்படுத்தி வந்தார்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய பொருட்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் விழிப்புணர்வுக்காக சுமார் 3 டன் செங்கரும்பினால் ஆன குடிசை வீடு அமைத்து அதில் பழங்கால பாரம்பரிய பொருட்களான சமையல் உபகரணங்கள், அளவைகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாகவே இதற்கான முயற்சியில் ஈடுபட்டு நேற்று இதனை நிறைவு செய்து நாளை தனது குடும்பத்துடன் செங்கரும்பு குடில் முன்பு கிராமிய முறைப்படி இன்று பொங்கல் தினத்தன்று பார்வைக்காக வைக்கப்பட்டள்ளது.
உழவர்களின் உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீட்டை நினைவு கூறும் வகையில் தத்துரூபமாக குடில் அமைத்து மட்டுமல்லாமல் பிரதமரின் திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் வீடு என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த செங்கரும்பு குடில் பார்க்க அழகான தோற்றத்திலும் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றில் இருந்து 10 நாட்கள் அப்பகுதி மக்கள் நேரில் பார்வையிட பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

.jpg)
No comments
Thank you for your comments