Breaking News

காஞ்சிபுரத்தில் பிஜேபி பிரமுகர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் - உடல் உறுப்பு தானம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் தாமரை  நாயகன் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும், காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவரும், விவசாய அணியின் காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளருமான ஆ. செந்தில்குமார் முதலியாரின் 45 வது பிறந்தநாள் விழா நேற்று (13.12.2023 புதன்கிழமை) மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு  செந்தில் பிரதர்ஸ் குழுமத்தை சேர்ந்த 45  இளைஞர்கள் உடல் உறுப்பு தானம், 45 இளைஞர்கள் கண் தானம்  ஆகியவற்றை அரசு மருத்துவமனையில்  அளித்தனர்.


 அதை தொடர்ந்து 45 தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு கவசம், புடவைகள் ஆகியவற்றை ஆ.செந்தில்குமார் முதலியார் வழங்கினார். பின்னர் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை எதிரே  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில்  காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட  தவ யோகி சஞ்சீவி ராஜா சுவாமிகள் உடல் உறுப்பு தானம், கண் தானம் செய்தவர்களுக்கு    சான்றிதழ் வழங்கி ஆ.செந்தில்குமார் முதலியாருக்கு  வாழ்த்துக்களையும், ஆசிர்வாதத்தையும் தெரிவித்தார்.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில்  பாரதிய ஜனதா கட்சியின்  முக்கிய பிரமுகர்கள், காஞ்சி நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இளைஞர்கள் மத்தியில்  உடல் உறுப்பு தானம், கண் தானம் ஆகியவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில்  நடத்தப்பட்ட இந்த பிறந்தநாள் விழா அனைவரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளைப் பெறும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments