Breaking News

காஞ்சிபுரத்தில் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்

காஞ்சிபுரம், டிச.3:

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பழங்குடியின மக்களுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


வடகிழக்குப் பருவமழை காரணமாக காஞ்சிபுரம் அருகே வையாவூர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இதனை அறிந்த காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பக இயக்குநர் து.ராஜ் தலைமையிலான குழுவினர் பழங்குடியின மக்களுக்கு அரிசி,பருப்பு வகைகள்,பிஸ்கட்,பழங்கள் அடங்கிய தொகுப்பை நேரில் சென்று வழங்கினார்கள்.ஏற்பாடுகளை குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி செய்திருந்தார்.

படவிளக்கம் : வையாவூர் அருகேயுள்ள பழங்குடியின மக்களுக்கு மழைக்கால நிவாரண உதவிகளை வழங்கிய குழந்தைகள் கண்காணிப்பக இயக்குநர் து.ராஜூ

No comments

Thank you for your comments