Breaking News

தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்...

காஞ்சிபுரம் :

தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்குவதை காஞ்சிபுரம் மாநகராட்சி உத்திரவாதப்படுத்திட வேண்டும் தமிழ்நாடு தீண்டமை ஓழிப்பு முன்னணி காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றும் வெளிமுகமை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்குவதை காஞ்சிபுரம் மாநகராட்சி உத்திரவாதப்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் முதல் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. 

அமைப்பின் முதல் மாநாடு காஞ்சிபுரத்தில்  மாவட்டத் அமைப்பாளர் எஸ்.ஆனந்த் தலைமையேற்று வேலையறிக்கையை முன்வைத்தார். அதற்குமுன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் இ.சங்கர் வரவேற்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். 

சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் கே.நேரு (தவிச), மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் (சிஐடியு), விசிக மாவட்டச் செயலாளர் மதி.ஆதவன்,  அ.வே.முரளி (திக), கே.பிரபாகரன்(பகுஜன்), ஜி.பரமசிவம் (போதிதர்மா புத்த விகார்), என்.சாரங்கன் (தவிச), எல்.முருகேசன் (டி.என்.டி.எ) ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.வி.ஆனந்தகுமார் நன்றி கூறினார். 

  • தீர்மானங்கள்

தமிழ்நாட்டில் சமீப காலமாக தீண்டாமையின் கொடூரம் பள்ளி குழந்தைகள் வரை நீட்சியடைந்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் இடையே அவ்வப்பொழுது தோன்றுகின்ற நஞ்சை அகற்றி வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் காலமுறை ஊதியத்தில் அனைத்து சமூக பாதுகாப்புடன் தூய்மைப் பணியாளர்கள் நியமனம் அளித்திட வேண்டும். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே சில கிராமங்களில் இரட்டை குவளை, சுடுகாடு மறுப்பு, பாதை மறுப்பு போன்ற சில அருவருக்கத்தக்க நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தீண்டாமை போக்குகளை ஒழித்திட வேண்டும். 

ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்கின்ற போது சாதியின் பெயரால் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது. 

அதனைத் தடுத்திடும் வகையில் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • புதிய நிர்வாகிகள்

36 பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலைவராக எஸ்.திருஞானம், செயலாளராக எஸ்.ஆனந்த், பொருளாளராக என்.நந்தகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments

Thank you for your comments