Breaking News

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ.3.50லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை காலணிகள் உற்பத்தி நிறுவனம் வழங்கியது

காஞ்சிபுரம், டிச.21:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.3.50லட்சத்தை வியாழக்கிழமை காலணி உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகிகள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினர்.


காஞ்சிபுரம் அருகே மாங்கால் கிராமத்தில் அமைந்துள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைகளான செய்யாறு எஸ்இஇசட் டெவலப்பர்ஸ் மற்றும் லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜசேகர், துணைப் பொதுமேலாளர் பஞ்சாட்சரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து ரூ.3.50லட்சம் வழங்கினார்.பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இருவரும் ஆட்சியரிடம் வழங்கினர்.

படவிளக்கம் : புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3.50லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கிய காலணி உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகிகள்

No comments

Thank you for your comments