Breaking News

இன்றைய (12-12-2023) ராசி பலன்கள்


மேஷம்

நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைக்கேற்ற மதிப்பு காலதாமதமாகக் கிடைக்கும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான விமர்சனங்கள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : சேமிப்பு குறையும். 

கிருத்திகை : சோர்வான நாள்.



ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு காரியத்தில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கற்பனை சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 

ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.


மிதுனம்

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும்.  உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனை நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுகளில் கவனம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

திருவாதிரை :  சாதகமான நாள்.

புனர்பூசம் : பொறுமையைக் கையாளவும்.


 

கடகம்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சலனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும். 

பூசம் : புரிதல் மேம்படும். 

ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.




சிம்மம்

மனதில் சூழ்நிலைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையைக் கையாளவும். ஆர்வம் மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : மாற்றங்கள் ஏற்படும். 

பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.



கன்னி

எழுத்துப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களின் மூலம் லாபம் மேம்படும். தடைகள் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : குழப்பம் விலகும். 

சித்திரை : லாபம் மேம்படும். 



துலாம்

குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். ஆடம்பரமான உடைமைகள் மீது ஆர்வம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை :  அனுபவம் வெளிப்படும்.

சுவாதி : மேன்மை ஏற்படும். 

விசாகம் : கற்பனைத்திறன் மேம்படும்.


விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த  மந்தத்தன்மை குறையும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில ஆலோசனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : மந்தத்தன்மை குறையும்.

அனுஷம் : புத்துணர்ச்சி ஏற்படும்.

கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.



தனுசு

செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறையும். வழக்கு பணிகளில் மாற்றமான சூழல் அமையும். வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : கட்டுப்பாடுகள் குறையும்.

பூராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

உத்திராடம் : நெருக்கடியான நாள்.



மகரம்

மனதிற்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வி தொடர்பான தெளிவு பிறக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மறுமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். கனிவு வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

உத்திராடம் : தெளிவு பிறக்கும். 

திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.

அவிட்டம் : சாதகமான நாள்.


கும்பம்

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். அரசுத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபார மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளைச் செய்வீர்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம்: முன்னேற்றம் உண்டாகும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 

பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும். 


மீனம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இறை வழிபாடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கைகூடும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரேவதி : சிந்தனைகள் மேம்படும். 

No comments

Thank you for your comments