காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் தகவல்
காஞ்சிபுரம், டிச.14:
மிக்ஜம் புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் வந்திருந்தனர்.அவர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.நேரு,பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. காய்கறிப்பயிர்கள் சுமார் 500 ஏக்கர் சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்,உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ள மழைக்கால நிதியுதவித்தொகை ரூ.5060 கோடியை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்ததுடன் பாதிப்பு நிலவரத்தையும் நேரில் எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்வின் போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ககன்தீப்சிங்பேடி,காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் வந்திருந்த மத்தியக்குழுவினரை சந்தித்து பாதிப்பு விபரங்களை எடுத்துக் கூறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

No comments
Thank you for your comments