Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் மேளா முகாமினை தொடங்கி வைத்தார் கலெக்டர் கலைசெல்வி

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் மேளா முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இன்று (15.11.2023) மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் மேளா முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இட ஒதுக்கீட்டின்படி வேலை வாய்ப்பு மற்றும் வங்கி கடன் மூலம் சுய வேலை வாய்ப்பிற்கு ஊக்கமளித்தும் இத்திட்டத்திற்காக மான்யம் வழங்கியும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மாவட்டங்களில் உள்ள வங்கிகளுடன் இணைந்து "வங்கிக்கடன் மேளா" (Loan Mela) மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கவும், அதற்கான மானியத்தினை இத்துறையின் மூலம் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கிட உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் மேளா, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.


 


 இம்முகாமில் முன்னோடி வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மகளிர் திட்டம், மாவட்டதொழில் மையம் மற்றும் மாவட்ட தாட்கோ அலுவலகம் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கிட ஏதுவாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  


இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  திருமதி.இரா.மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்துக் கொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments