காஞ்சியில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினார் எஸ்பி
தமிழக சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் பெரும்பாலானது இருசக்கர வாகன விபத்துகள் தான் அதிகமாக உள்ளது.
அந்த வகையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவு சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
ஊர்க்காவல் படை பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தியவாறு பேரணியாக சென்றனர்.
பேரணியாகச் சென்ற ஊர்காவல் படையினருடன் தனியார் பள்ளி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சாலையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் தங்கள் உயிரை காத்துக் கொள்ளும் வகையில் தலைக்கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சாலையில் வந்த வாகன ஓட்டிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா.சுதாகர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மெடல் அணிவித்து மரக்கன்றுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
பேரணியில் சைபர் கிரைம் ஏ டி எஸ் பி பாலமுருகன், ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் முனைவர் ஸ்டெல்லா மேரி,உதவி கமாண்டர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments