காஞ்சி திருச்சந்தன குட உருஸ் உற்சவ விழா - மைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரில் 637 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்து இன்று வரை எல்லா மதத்தினரும் போற்றப்பட்டு ஜியாரத் என்னும் தரிசன செய்ய வருவோருக்கு அனுதினமும் அருள் ஆசி வழங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஹஜ்ரத் காஜா சையத் ஷாஹ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா குத்புல் அக்தாப் சிஷ்தி அவர்களின் திருச்சந்தன குட உருஸ் உற்சவம் கடந்த 29ஆம் தேதி திருக்கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சந்தனக்கூட உற்சவம் நடைபெற்றது.
இதில் தமிழக சிறுபான்மை துறை அமைச்சரும் செயலக தமிழர் நலன் வாழ் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
சிறப்பு தொழுகைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் , திருச்சந்தன கூட ஒரு உற்சவ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைவரும் ஒன்று கூடி விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த தர்காவிற்கு வரும் பெண்களுக்கு தங்கும் இடவசதி கேட்டு வைத்த கோரிக்கையை ஏற்று வக்பு வாரியம் சார்பில் பணிகள் துவங்கியுள்ளது.
அனைத்து சமுதாய பொதுமக்கள் இங்கு வருவது நலன் கருதி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் தர்கா மற்றும் தேவாலயங்கள் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் ஜாதி மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்று கூடி இது போன்ற திருவிழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேலில் இருந்து இதுவரை 163 பேர் பதிவு செய்து அழைத்து வரப்பட்டனர். இதில் 12 பேர் நேரடியாக வந்துள்ளனர். மேலும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் அதற்கான பதிவுகளை செய்தால் எந்நேரத்திலும் பாதுகாப்புடன் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா தர்மகர்த்தா முஹம்மத் இம்தியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments