Breaking News

அதிகாரிகளுக்கு எதிராக உணவக உரிமையாளர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் 10 நாட்களில் இரண்டாவதாக ஆய்வு நடத்த வந்த உணவு பாதுகாப்பு அதிகாரியால் அதிருப்தி அடைந்த உணவக உரிமையாளர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புத்தேரி பகுதியில் காஞ்சி பிஸ்மில்லாஹ் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கள் கடையின் மீது புகார் வந்திருப்பதாக கூறி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் சோதனை செய்துள்ளார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாகவும் சிக்கன்-ல் நிறமி என்று சொல்லப்படக்கூடிய கலர் பொடி சேர்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் தங்களது இறைச்சியினை சோதனைக்கு அனுப்பிட வேண்டும் என கூறி அதற்காக ஆய்வு செய்திட வேண்டும் என சொல்லி இறைச்சிகளை எடுத்து சென்று சோதனைக்குப்படுத்தப்பட்ட பின்பு அதற்கான அபராத தொகையினை ஆன்லைன் மூலமாக செலுத்திட கூறி சென்றிருக்கிறார். இந்த நிலையில் தீடிரென நேற்றிரவு 8 மணிக்கு வந்த அதே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் தங்களது கடை மீது புகார் வந்திருப்பதாக கூறி சோதனை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரி. சம்பந்தப்பட்ட கடையின் பெயர், தெரு பெயர், இவற்றையெல்லாம் பார்த்து செல்போனில் குறிப்பெடுத்து கடையின் உள்ளே நுழைந்த அதிகாரி ஏற்கனவே கடந்த 10நாட்களுக்கு முன்பு சோதனைக்காக சாம்புளுக்காக எடுத்து சென்றதற்கான சோதனை முடிவு வராத நிலையில் மீண்டும் சோதனைக்காக சிக்கன் இறைச்சியை எடுத்து அதிர்ச்சியூட்டிருக்கிறார்.

மேலும் சிக்கன் 65-ல் நிறுமி சேர்த்திருப்பதால் அபராதம் தொகை செலுத்த வேண்டும் அவற்றை பில் இன்றி செலுத்துகிறீர்களா இல்லை முடிவு வந்த பின்பு அதிக தொகையுடன் செலுத்த தயாரா என மறைமுகமாக லஞ்சம் கேட்டிருக்கிறார்‌. இதனால் மன உலைச்சலுக்கு உள்ளான கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரி தனது குடும்பதரை அனைவரையும் வரவழைத்து கையில் பெட்ரோல் கேனுடன் வந்து இது போன்ற தன்னை மன உலைச்சலுக்கு உள்ளாக்கினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என கூறி எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் யார் புகார் அளித்தது என கேட்ட நிலையில் உண்மையை வெளியில் சொல்வது போல் அவரது செல்போனில் புகார் விவரம் குறித்தான தகவலை காட்ட அதில் இரண்டாவது முறையாக இந்த கடையில் சிக்கன் பகோடா வாங்கினேன் அவை மோசமான கோழி இறைச்சி பயன்படுத்தப்படுவதை நான் கவனித்தேன், தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்கவும் என இவராகவே புகார் அளித்தது போன்ற அந்த புகார் விவரத்தில் பதிவாகியிருந்தது அதிரச்சியூட்டியது.

இதனையெடுத்து கடையில் சோதனை குறித்த ஆய்வறிக்கை தயார் செய்து அவற்றில் கையொப்பமிட கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரியிடம் கூறிய நிலையில் கையெழுத்து போட மறுத்த நிலையில் கடையின் சுவற்றில் அதனை ஒட்டிவிட்டு சென்றார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த போது காஞ்சிபுரத்தில் SRB பிரியாணி கடையில் கண்துடைப்பிற்காக ஆய்வு நடத்தி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மாவட்ட அலுவலர் கண்ணில் மிளகாய் பொடி துவ நினைத்த நிலையில் அவரை நம்பாமல் அக்கடையில் ஆய்வு நடத்தி கிலோ கணக்கில் குளிரூட்டப்பட்ட இறைச்சிகள்,துரித உணவிற்காக பயன்படுத்த வைத்திருந்த சாதம் இவற்றெல்லாம் கண்டறிந்து கிருமி நாசினி கொண்டு அழித்ததும்,இவர் அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அண்மையிலேயே கடந்த 1 மாதத்திற்கு முன்னரே மீண்டும் பணியில் சேர்ந்திருப்பதும் குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments