Breaking News

தமிழகத்துக்கு 2,700 கனஅடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை.

புதுடெல்லி, நவ.24-

டிசம்பர் மாதம் இறுதி வரை நாள்தோறும் தமிழகத்துக்கு 2,700 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி நீர்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று பிற்பகல் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

நீர் திறக்க உத்தரவு

கூட்டத்தில் தமிழகம் தரப்பில், 'ஜூன்&செப்டம்பர் வரை கர்நாடகம் வழங்க வேண்டிய 123 டி.எம்.சி. தண்ணீரில் 11 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரையும் டிசம்பர் மாதத்துக்கான 7.35 டி.எம்.சி. நீரையும் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 அதன்படி, டிசம்பர் மாதம் இறுதி வரை நாள்தோறும் தமிழகத்துக்கு 2,700 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நவம்பர் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments