04-11-2023- ம் தேதி மேஷம் முதல் மீனம் வரை ராசி பலன்கள்
மேஷம்:
தாய் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வாகனங்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உறவுகளிடத்தில் தெளிவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : ஆதாயம் அடைவீர்கள்.
கிருத்திகை : கையிருப்புகள் குறையும்.
ரிஷபம்:
சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். அரசு சார்ந்த சில புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
கிருத்திகை : தைரியம் பிறக்கும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கடகம்:
கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில விஷயங்களால் குழப்பம் உண்டாகும். முன்கோபமின்றி நிதானத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : குழப்பம் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
சிம்மம்:
உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொழில் வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். இரவு நேரப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
கன்னி:
புத்திக்கூர்மையால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மறுமணம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமான சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். நட்பு நிறைந்த நாள்.
உத்திரம் : லாபம் மேம்படும்.
அஸ்தம் : அனுகூலம் ஏற்படும்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
துலாம்:
அரசு சார்ந்த பணிகள் நிறைவுபெறும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தாயாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் குறித்த தெளிவு பிறக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் தோன்றி மறையும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : தெளிவு பிறக்கும்.
விசாகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
விருச்சிகம்:
தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதில் கவனம் வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளால் மாற்றம் ஏற்படும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : தேடல் பிறக்கும்.
தனுசு:
வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திட்டமிட்ட சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. திறமைக்கான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். சிரமம் நிறைந்த நாள்.
மூலம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூராடம் : அலைச்சல்கள் மேம்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்:
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சகோதரர் வழியில் ஆதரவு ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அசதிகள் நிறைந்த நாள்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : ஆதரவு ஏற்படும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
கும்பம்:
கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். போட்டி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். எதிர் பாலின மக்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்மாமனிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள்.
அவிட்டம்: நெருக்கடிகள் குறையும்.
சதயம் : ஆர்வம் ஏற்படும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
மீனம்:
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : குழப்பம் விலகும்.
ரேவதி : ஆர்வம் உண்டாகும்.
No comments
Thank you for your comments