Breaking News

மழைநீர் வரத்துக் கால்வாய்கள் நேரில் பார்வையிட்டு கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில்,  மழைநீர் வரத்துக் கால்வாய்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இன்று (07.10.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் குளம், உலக அளந்தார் கோயில் குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை பார்வையிட்டார் பின்பு அருந்ததியர் பாளையம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு மஞ்சள் நீர் கால்வாய்யை பார்வையிட்டு அதன் பகுதிகளில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாய்களில் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 

ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் திருப்பருத்திகுன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரி ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர்  செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் க.கண்ணன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்  ச.ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் நீல்முடியான், உதவி பொறியாளர் மார்கண்டேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments