காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் :
காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை தர மறுக்கும் மத்திய அரசையும், உரிமையை பெற்ற தர தவறிய தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும் காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![]() |
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை படத்தில் காணலாம். |
காவிரி பிரச்சினை
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான நீரினை திறந்து விட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசின் விரோதப் போக்கினை கண்டித்தும்,தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத்தர தவறிய தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் முன்னிலையில்,மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் குமார் தலைமையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
🔥 கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தங்களது கைகளில் கட்சி கொடியினை ஏந்திக்கொண்டும்,"காவிரி உனக்கு அரசியல், எங்களுக்கு வாழ்வியல்", "எங்கள் காவிரி எங்கள் உரிமை, உரிமையை மறுக்காதே, உரிமையை பறிக்காதே","தண்ணீரை கொடு அல்லது தனியாக விடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும்,கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும்,மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments