Breaking News

வேலுார் மாவட்டத்தில், நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

வேலுார், அக்.1-

வேலுார் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்கிறது.

கிராமசபை கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள்  நாளை 2.10.2023  காந்தி ஜெயந்தி அன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🔥  கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..


விவாதம்

இந்த கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய  பொருள்கள் விவரம் வருமாறு : 

 கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.  கிராம ஊராட்சியின் தணிக்கை. அறிக்கை. ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய      நடவடிக்கைகள்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துவிவாதித்தல்.

 வேலை உறுதி திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்). ஜல் ஜுவன் இயக்கம்.பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம். 2023-24-ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டதினை பொதுமக்களுக்கு அறிவித்தல்.கிராம ஊராட்சியின் தணிக்கை. அறிக்கை (2022-23).மக்கள் திட்டமிடல் இயக்கம்

காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல்.இதர பொருட்கள்.

மண்டல அலுவலர்கள்

மேற்படி,  கிராம சபைக்கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்திரவிட்டுள்ளார்.



No comments

Thank you for your comments