காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 412 பேர் கைது
படவிளக்கம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்பப் பெற வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ அமைப்பினர்
காஞ்சிபுரம், அக்.5:
காஞ்சிபுரம் காந்தி சாலையில் பெரியார் தூண் அருகில் சிஐடியூ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். வடமாநில தொழிலாளர்களையும்,தமிழக தொழிலாளர்களையும் வேறுபடுத்தி பேசி வருவது,,பண்டிகை விடுப்பு,சம்பள விடுப்பு கேட்கக்கூடாது என பணியாளர்களை கட்டாயப்படுத்துவதாலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டக்குழு நிர்வாகிகள் எஸ்.சீனிவாசன், எஸ்.கௌரிசங்கர், ஜி.வசந்தி ஆகியோர் உட்பட திரளான பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 28 பெண்கள் உட்பட 412 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆர்ப்பாட்டத்தையொட்டி காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
No comments
Thank you for your comments