Breaking News

எறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் 19 தீர்மானங்கள் - ஒரு மனதாக ஏற்பு


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், எறையூர் ஊராட்சியில்  02.10.2023 அன்று அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் முன்னிட்டு கிராம சபை கூட்டம்  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எறையூர் ஊராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேட்டினை கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் அவர்கள் 19 தீர்மானங்கள் கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். தீர்மானத்தினை பொதுமக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து 80 வயது மேற்பட்ட மூத்த வாக்காளர்களை  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சியின் மூலம் கிராம சபை துவக்க உரையினை பார்வையிட்டனர்.

பின்பு கூட்டத்தில் பொதுமக்களுக்கு குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி கிராம பொதுமக்கள் தங்கள் குறைகளை கூட்டத்தில் கூறினர்.  அதில் கிராமத்திலிருந்து வெளியிடத்திற்கு செல்ல மிகவும் சிரமம் அடைவதாகவும், பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அணுகி ஒரு வார காலத்திற்குள் பேருந்து வசதியினை ஏற்படுத்தி தருவதாக கூறப்பட்டது.  மீதமுள்ள குறைகளை அந்தந்த  துறை அலுவலர் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடியாக நிறைவேற்றப்படும்  என  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கூட்டத்தில்  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்   மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்,  மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்  செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை ஆ.மனோகரன், திருப்பெரும்புதூர் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர்  சசிரேகா சரவணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 

No comments

Thank you for your comments