Breaking News

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இன்று (22.09.2023) மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன்  துவக்கி வைத்தார்கள்.


தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன தொழிற்பேட்டைகளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வளாகத்தில் 2750 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி எஸ்.மதுமதி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, அரசு அலுவலர்கள், தொழிற்பேட்டை சங்கத்தினர் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments