Breaking News

பிரபல இசையமைப்பாளர்-நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை :

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் வெளிவந்த நான், சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.



இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.  இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். 

இவரது மகள் மீரா(16). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

படிப்பு காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா அல்லது குடும்பத்தினால் ஏற்பட்ட மன அழுத்தமா என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், தற்கொலை எதற்கும் தீர்வு கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



 

No comments

Thank you for your comments