Breaking News

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: 

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு முன்னதாக ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இப்படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்  முருகதாஸை டேக் செய்து கூறியிருப்பதாவது:- 

"பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் 😊👍

எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்". 

இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments