Breaking News

போலீசாரை அறிவாளால் தாக்கியதால் ரவுடி விஸ்வா சுட்டுக் கொல்லபட்டார்



காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குல்லா (எ) விஸ்வா (எ) விஸ்வநாதன் வயது 34.

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி,நாட்டு வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமுறைவாக இருந்து வந்துள்ளார்.

விஷ்வா

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தலைமறைவாக இருந்த குல்லா (எ) விஸ்வாவை ஏடிஎஸ்பி. வெள்ளத்துரை தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி அடுத்த  பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குல்லா (எ) விஸ்வாவை சுற்றி வளைத்து  கைது செய்ய முயற்சித்தனர்.

அப்பொழுது விஸ்வா மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயற்சித்து உள்ளார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட தனிப்படை போலீசார் தற்காப்புக்காக தூப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்து விஸ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விஸ்வா அறிவாளால் தாக்கியதில் தலைமை காவலர்களான ராஜேஷ், வாசு ஆகியோர் கைகளில் வெட்டுக்காயம் பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

என்கவுண்டர் செய்த ரவுடி விஸ்வாவின் உடலை போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து அறிந்தவுடன் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் என்கவுண்டர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக சட்ட ஒழுங்கு காவல் ஏடிஜிபி அருண் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் போலீசாரை பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி அருண் :-

கொலை வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி குல்லா என்கின்ற விஸ்வா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் அவருடன் தொடர்பில் உள்ள அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகவும் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ,சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிரம்பி இருக்கின்றன. இதில் தொழில் போட்டி காரணமாக ரவுடிகள் பெருகி வருகின்றனர். 

இவர்களை ஒடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு என்ன காரணத்தால் இவர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இவர்களை ஒடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன குறித்தும் விரிவாக ஆலோசித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறோம் .

ஸ்ரீபெரும்புதூர் சுங்கவாசத்திரம் ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments