காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.21லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், செப்.14:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறை கேட்புக் கூட்டத்தில் ரூ.3.21லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 56 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வங்கிக்கடன்,வீட்டு மனைப் பட்டா, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 2 பேருக்கும்,9 பயனாளிகளுக்கு இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதிஉதவிக் காசோலைகள் உள்ளிட்டவை மொத்தம் 3,21,750 மதிப்பிலான உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி உட்பட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments