அமைச்சர் இல்லா மாவட்டம்! - புலம்பும் தொண்டர்களும் பொதுமக்களும்
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லை என்று தொண்டர்களும் பொதுமக்களும் புலம்பும் வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடந்த ஆட்சி காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வந்தனர்
இருப்பினும் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு அதிகப்படியாக செய்தித்தாள்களில் வெளி வந்ததால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இருவரும் தோல்வியை தழுவினர்
அதுமட்டுமல்லாமல் இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக வேட்பாளர்கள் 9 பேரும், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆவடி தொகுதியில் வெற்றி பெற்ற சாமு நாசர் அவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இவர் இதனை சரியாக கவனிக்காததாலும் பொதுமக்கள் மத்தியில் இவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாகவும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவருக்கு இந்த பதவி பறிபோனது.
இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரமான இவருக்கு கூடுதல் பொறுப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை கவனிப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி அற்றவர்களாக என்று பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த தொகுதியில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அமைச்சர் பதவி வழங்குவார்களா என இப்பகுதி பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் பரவலாக பேசப்பட்டு வருகிறது
இதற்கு முதலமைச்சர்செவி மடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments
Thank you for your comments