ஆயுதப்படை மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன - வெற்றி பெற்ற காவலர்களுக்கு கோப்பை சான்றிதழ் வழங்கி பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு Dr.M.சுதாகர் அவர்கள் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
நேற்று (07.07.2023) ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் 100மீ / 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், கபடி, மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இன்று (08.07.2023) காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவனுபாண்டியன் அவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திய ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
No comments
Thank you for your comments