Breaking News

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை   கால அவகாசம் நீட்டிக்கப்படடுள்ளது.

 காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு  8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Online-ல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட 20.06.2023 கடைசி நாளாகும்மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும்விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு  செய்திடவும் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிமுதல்வர்அரசு தொழிற்பயிற்சி நிலையம்ஒரகடம்மற்றும் கைபேசி எண்கள்: 6379090205, 9677258519 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்..., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments