Breaking News

ஆவடி மாநகராட்சியில் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம்

 திருவள்ளூர் :

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சியாக இருந்த பொழுது லஞ்சம் தலை விரித்தாடியது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்ததின் பெயரில் இரு நபர்களை கைது செய்தனர் 

நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு ஆய்வாளர் காமதுறையும் வருவாய்த் துறையில் சத்யா அவர்களையும் கைது செய்தனர்.. இதனை தொடர்ந்து மாநகராட்சியாக அறிவித்து 1 1/2 ஆண்டு கூட ஆகவில்லை நகர அமைப்பு பிரிவில் நகரமைப்பு அலுவலர் மூன்று நபர்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நகரமைப்பு ஆய்வாளரும் மாற்றப்பட்டுள்ளார் இதற்கு காரணம் அதிகமாக லஞ்சம்   பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டதா இல்லை மேல் அதிகாரிகளுக்கு பணம் செல்லவில்லையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

அதிகாரிகள் தொடர் மாற்றத்தால் தற்பொழுது ஒரு  வருடமாக நகரமைப்பு பிரிவில் எந்த ஒரு பணியும் சரியாக நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  பல கோப்புகளும் தேங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் மாநகராட்சிக்கு வரும் வருமானமும் முற்றிலும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளது.  வருவாய்த் துறையிலும் அதிகப்படியாக லஞ்சம் கேட்பதால் வரிவசூல் நடப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது 

ஆகவே இந்த இரண்டு துறைகளிலும் நகராட்சி இயக்குனர் பொன்னையா அவர்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை  சரி பார்த்து கையத்திட   உத்தரவு இடவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் லைசன்ஸ் சர்வேயர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர அமைப்பு அலுவலர் பாஸ்கர் அவர்கள் சரி பார்த்து கையெழுத்துருவாரா குழப்பத்தில்  பொதுமக்கள் இதேபோல் பொறியாளர் பிரிவில் பொறியாளர்களை நகரமைப்பு பிரிவில் உள்ள வேலைகளை பார்ப்பதற்கு உத்தரவு பிறப்பித்தன் காரணமாக இந்த பொறியாளர்கள் தற்சமயமாக இந்த பணிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் 

இதில் சில பொறியாளர்கள் எனக்கு  இந்த வேலையை பற்றியும் ஒன்றும் தெரியவில்லை ஆனாலும் என்னை இந்த பணியை செய்ய உத்தரவிடுகிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்றும் சிலர் தெரிவித்தனர் 

பொதுமக்கள் கோரிக்கையான இந்த பகுதிகள் உள்ள திருமண மண்டபங்களை ஆய்வு செய்து பார்க்கிங் வசதி இல்லாத திருமன மண்டபங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

No comments

Thank you for your comments