Breaking News

போதை பொருள் ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


அதன் தொடர்ச்சியாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.06.2023) காலை 07.00 மணியளவில் 200 இருசக்கர வாகனத்தில் பேரணியாக காந்திரோடு தேரடியிலிருந்து புறப்பட்டு மூங்கில்மண்டபம், காமராஜர் சாலை, பேருந்துநிலையம், ரெட்டை மண்டபம், நான்கு ராஜவீதி சுற்றி மீண்டும் பேருந்துநிலையம், காமராஜர் சாலை, மூங்கில்மண்டபம், காந்திரோடு தேரடியில் நிறைவுபெற்றது. 

இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர் அவர்கள், கொடியசைத்து துவக்கிவைத்தார். 


மேலும், இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சிவனுபாண்டியன், திரு.சார்லஸ் சாம் ராஜதுரை, திரு.பாலகுமார் ஆகியோர்கள்,  துனைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜீலியஸ் சீசர், திரு.வெங்கடகிருஷ்ணன், திரு.வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.




No comments

Thank you for your comments