பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், காட்ரம்பாக்கம், வெங்காடு, ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கம், வெங்காடு, ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இன்று (13.06.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
2023-2024 கல்வியாண்டில் பள்ளிகள் திறந்ததையொட்டி, திருப்பெரும்புதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாடப் புத்தகங்கள் வழங்கி. அறிவுரை வழங்கினார்கள்.
பின்பு திருப்பெரும்புதூர் ஒன்றியம், காட்ரம்பாக்கம் ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில், 31 வீடுகள் கட்டப்பட்ட பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியின் கீழ் குளம் சீரமைக்கப்படும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
மேலும் ரூ.27.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தை நேய பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும் காட்ரம்பாக்கம் ஊராட்சியில் கமித்ரமேட்டில் ரூ.91000/- மதிப்பீட்டில் சமையலறை கட்டிடம் புணரமைத்தல் பணியினையும், ரூ.24.40 இலட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து வெங்காடு ஊராட்சியில் ரூ.9.13 இலட்சம் மதிப்பில் பொது விநியோக கடை கட்டும் பணியினையும், நெற்களம் கட்டுகள் ரூ.7.21 இலட்சம் மதிப்பில் கட்டும் பணியினையும், ரூ 11.50 இலட்சம் மதிப்பீட்டில் குளம் புனரமைக்கும் பணியினையும், ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி சமையற்கூடம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வெற்றிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.





No comments
Thank you for your comments